Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலகிரி மாவட்டம் அம்மன் கோவில்களில் ... தஞ்சாவூர் புன்னைநல்லூர் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணராயபுரம் மகாலட்சுமி கோவிலில்: கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
03:08

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... கோவிந்தா... கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நடந்தது.

கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரம் அருகில் மிகவும் பழைமையான மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, 18 பெருக்கு விழாவை முன்னிட்டு, அடுத்து வரும் நாளில் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்நிலையில்,  ஆடி, 19வது நாள் என்பதால், கோவில் வளாகத்தில் நெய் விளக்கு ஏற்றப்பட்டு, கருடன் வட்டமிட்ட பின், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன், ஏழு பேருக்கு சக்தி தேங்காய் தலையில் உடைக்கபட்டது. அதன்பின், கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், வரிசையாக அமர வைக்கப்பட்டு, ஒவ்வொரு பக்தர்களுக்கும் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில், 536 பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தலையில் தேங்காய் உடைத்த போது, சிறுசிறு காயமடைந்த பக்தர்களுக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar