Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் ... முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப்பெருமாள் வீதியுலா முத்துப்பல்லக்கில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சங்கடஹர சதுர்த்தி: வெற்றி விநாயகர் பாதம் பணிவோம்
எழுத்தின் அளவு:
மகா சங்கடஹர சதுர்த்தி: வெற்றி விநாயகர் பாதம் பணிவோம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
10:08

விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் தேய்பிறை சதுர்த்திக்கு மகாசங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இந்நாளில் விநாயகரை வழிபட்டால் தடையனைத்தும் விலகும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அதற்காக விநாயகரை வழிபடும் விதத்தில் பிரார்த்தனை இங்கு இடம்பெற்று உள்ளது.

* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே!
வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் தர காத்திருக்கும் குணநிதியே!
பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே!
உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!
ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணமுள்ளவனே! கஜமுகாசுரனை வென்றவனே!
கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே!
பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே!
தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே!
யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற
செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே!
விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன்.
உனக்கு என் நமஸ்காரம்.

* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே!
நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே!
நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே!
ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே!
சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே!
உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே!
எங்கள் துன்பத்தை தீர்த்து வை. துாய்மையான மனதைக் கொடு.
உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே!
உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே!
முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகி றேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!

* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானைமுக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே!

சரணம்.. சரணம்... சரணம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar