Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் சக்கர தீர்த்தகுளம் ... ராகவேந்திரா சுவாமிகளின் 346வது மஹோத்ஸவம் ராகவேந்திரா சுவாமிகளின் 346வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்களை காவடி தூக்கும் ஆண்: பழங்கால சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பெண்களை காவடி தூக்கும் ஆண்: பழங்கால சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
12:08

திருப்பூர்: சிந்து சமவெளி நாகரிக முத்திரையில் உள்ளது போல், காவடி தண்டு முறையில், பெண்களை தோளில் சுமந்து செல்லும் சிற்பம், திருப்பூர் அருகே கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒருவர் காவடி தண்டு முறையில், இரு பெண்களை துாக்கி செல்லும் வகையில், அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: வல்லக்கொண்டம்மன் கோவிலில், 55 செ.மீ., உயரம், 40 செ.மீ., அகலத்தில், சிற்பம் காணப்படுகிறது. தோளில் ஒரு கம்பை வைத்து, இரு பெண்களை, ஆண் ஒருவர் சுமந்து வருவது போல் உள்ளது. தோளில் தண்டு, வலது கையில் ஆயுதம், இடையில் குறுவாள், வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை என, சிற்பம் நேர்த்தியாக உள்ளது. சிந்து சமவெளி நாகரிக முத்திரையில் உள்ளது போல், இது உள்ளது. பண்டைக் காலத்தில், ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்கு செல்லும் மக்கள், பொருட்களை தோளில் சுமந்து செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனர். காவடி தண்டு மூலம், இருபுறமும் பொருட்கள், உணவு தானியங்கள், நீர் கலன், பூஜை பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல், தற்போது இந்த, நாயக்கர் கால சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் துவங்கி, நாயக்கர் காலம் வரை, 3,000 ஆண்டுகளாக, காவடி மரபு தொடர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar