பதிவு செய்த நாள்
02
செப்
2017
02:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மூட்டாம்பாளையம் பூமிநீளா சமேத வரதராஜப்பெருமாள் கோவில், மகா கும்பாபிேஷக விழா வரும், 4ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, இன்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர் ஆராதனம், வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்குகிறது. நாளை காலை, 9:00 மணிக்கு முதற்கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், வேதபாராயணம், துவார பூஜை, ேஹாமம், மகா சுதர்சன ேஹாமம், மதியம், 12:00 மணிக்கு மகாபூர்ணாஹுதி, முதல்காலம்பூர்த்தி, மாலை, 3:30 மணிக்கு கலசம் விமானத்தில் வைத்தல், மாலை, 6:30 மணிக்கு, யாக பூஜை ஆரம்பம், லட்சுமி ேஹாமம், நரசிம்மர் ேஹாமம், பரிவார மூர்த்தி ேஹாமங்கள் மற்றும் காயத்ரி ேஹாமமும் நடக்கிறது.
இரவு, 8:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, இரண்டாம் கால பூர்த்தியும் நடக்கிறது. தொடர்ந்து, 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு கோ பூஜை, காலை, 7:00மணிக்கு சகஸ்ரநாம ேஹாமம், காலை, 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி, கலசம் புறப்பாடு, காலை, 9:00 மணிக்குமேல், 10:30மணிக்குள் மகா கும்பாபிேஷகம், காலை, 11:00 மணிக்கு மகா அபிேஷகம்,காலை 12:00 மணிக்கு திருக்கல்யாணம், காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது.