Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானியில் காவிரி மஹா புஷ்கர விழா: ... பழநி பெரியாவுடையார் கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு பழநி பெரியாவுடையார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழை காத்தம்மன் கோவில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழை காத்தம்மன் கோவில் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

12 செப்
2017
05:09

மேலூர்: மேலூõர் அருகே வெள்ளலூரில் ஏழை காத்தம்மன் கோவில் திருவிழா துவக்கத்தை முன்னிட்டு அம்மனாக அலங்கரிக்கப்பட்ட ஏழு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர், <உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி ஆகிய கிராமங்கள் சேர்ந்தது வெள்ளலூர் நாடு என்றழைக்கப்படுகிறது. இக்கிராம மக்களின் முக்கிய திருவிழாவாக ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஏழு குழந்தைகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளலூரில் உள்ள  ஏழைகாத்தம்மன் குடியிருப்பு கோவில் முன்பு பொதுமக்கள்  நூற்றுக்கும்  மேற்பட்ட குழந்தைகளோடு கோயின் முன் திரண்டனர். அவர்களை மேலவளசையை சேர்ந்த பூசாரி சின்னத்தம்பி  மூண்டவாசி, வேங்கைபுலி, சமட்டி, நைக்கான், சாவடங்கி, வெக்காளி, சலிப்புலி உள்ளிட்ட  7  பிரிவுகளை சேர்ந்த  குழந்தைகளை தேர்வு செய்து  கோயிலுக்குள் அழைத்து சென்றார். இச் சிறுமிகள் 15 நாட்கள் கோயிலுக்குள் தங்கியிருந்து 60  கிராமத்தை  சுற்றி வலம் வந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைத்து சாப்பிடுவார்கள். இந் நாட்களில்  பொதுமக்கள் எண்ணெய் தாளிதம், மாமிசம், மரம் வெட்டுதல், மாவு பிசைந்து சமைக்காமல் கடுமையாக விரதம் இருப்பார்கள். செப்.19ல் முளைபிடுங்கி ஆடுதல் (பானையில் இருக்கும் நெல் எடுப்பது), நிகழ்ச்சியும், செப். 24ல் அம்பலச்சோறு நிகழ்ச்சியும், 15 நாள் முடிவான செப். 26ல் ல் சிறுமிகள் முன்னே நடந்து செல்ல அம்பலகாரர்கள்  தலைமையில் கோயில் வீட்டில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள கோயில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து செல்வார்கள். அவர்களை தொடர்ந்து பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் கேட்டவர்கள் பதுமைகளை சுமந்து சென்றும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனைத் தொடர்ந்து அக்.27ல் தேரோட்டமும், அக்,28ல் மஞ்சள் நீராட்டும், அக்.3ல் கோவில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar