Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாளுக்கு திருப்பதி ... ஏழு கிராம முத்தாலம்மன் கோயில் திருவிழா ஏழு கிராம முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

பதிவு செய்த நாள்

14 அக்
2017
11:10

திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க, குன்றத்து சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான  தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேல் மலைமேல் கொண்டு செல்லும் விழா நடந்தது.

நேற்று காலை மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு, சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது . சிறப்பு பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது, பல்லக்கில் வீதி உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் வேல் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி,  பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜைகள் முடிந்து, கோயில் சிவாச்சார்யார்கள் வேலை, சுனை தீர்த்தத்தில் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியினாலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகளுக்குப்பின்பு பூ பல்லக்கில் வேல் வீதி உலா முடிந்து  மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar