Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கழுவன் கோவில் திருவிழா: ஆடு ... வைஷ்ணவ தேவியை தரிசிக்க 50 ஆயிரம் பேருக்கு அனுமதி வைஷ்ணவ தேவியை தரிசிக்க 50 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் தபசுக்காட்சி: திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் தபசுக்காட்சி: திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 நவ
2017
11:11

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் தபசுக்காட்சி நேற்று நடந்தது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பிரசித்திபெற்றது. இவ்விழா கடந்த 3ம் தேதி காலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். காந்திமதி அம்மன் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு நேற்று காலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். நேற்று பகலில் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி,அம்பாளை தரிசித்தனர். நேற்று மாலை சுவாமி, அம்பாள் நெல்லை டவுன் நான்கு வீதிகளிலும் வீதி உலா நடந்தது. இன்று 14ம் தேதி காலை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ விழா நடக்கிறது. 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடக்கிறது. 16ம் தேதி வரை அம்பாள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar