Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பயணம்: போக்குவரத்தில் ... 1800 அடி உயர மருத்துவாழ் மலையில் 2ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை ஜரூர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை ஜரூர்

பதிவு செய்த நாள்

30 நவ
2017
12:11

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியும், விளக்குகள் விற்பனையும் ஜரூராக நடந்து வருகிறது. கார்த்திகை மாத பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில் தமிழர்கள் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி, மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விழா, தீபத் திருநாள். கார்த்திகை தீபம் அன்று மாலை வேளையில், வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவர். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தீப திருநாள் டிச., 2ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களால், பாரம்பரிய அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபத்திற்கு ஒரு மாதம் முன்பே, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு விடுவோம். அந்த ஒரு மாதம், வேறு எந்த பொருட்களும் தயாரிப்பதில்லை. தினமும் ஆயிரக்கணக்கான ஒரு முகம், ஐந்து முகம் அகல்விளக்குகள் தயாரித்து, காயவைத்து, சுட்டு, விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு அகல் விளக்கு, இரண்டு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லாமல், சிலரால் பாவை விளக்கு, தேங்காய் விளக்கு, தாமரை பாலி விளக்கு, மயில் விளக்கு, சங்கு விளக்கு, பிள்ளையார் விளக்கு, துளசி மாட விளக்கு, பூச்செட்டி விளக்கு, அய்யப்ப தீப விளக்கு என பல விதங்களில் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கார்த்திகை தீப திருநாள் நெருங்கும் நிலையில், தலைநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், சுற்றுவட்டார பகுதிகளில் தீப விளக்கு விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. - நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar