Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்:சந்தோஷ சாரலில் ஜமாய்க்கலாம் ... தனுசு: வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கப் போகுது பாடம் தனுசு: வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருச்சிகம்: மழை விட்டாலும் தூவானம் விடலையே!
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: மழை விட்டாலும் தூவானம் விடலையே!

பதிவு செய்த நாள்

09 டிச
2017
03:12

வெற்றி மனப்பான்மையுடன் செயலாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

சனிபகவான்  உங்கள் ராசியில் இருந்து மனஉளைச்சல்,  வீண்அலைச்சலை உருவாக்கி இருப்பார். வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்காது.   சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேர்ந்திருக்கும். இந்த சூழலில் சனிபகவான் 2-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பானதல்ல.

“தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என்பது ஜென்மச்சனியிடம் தப்பி விட்டீர்கள். ஆனால்,  “மழை விட்டாலும், தூவானம் விடலையே” என்பது போல சிரமம் தொடரவே செய்யும்.  அவரது 10-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. பொன், பொருள் சேரும்.  பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.   குருபகவான் 12-ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. அவரால் பொருள் விரயம் ஏற்படலாம். 2018 பிப்.14-ல் உங்கள் ராசிக்கு வருவதும் நல்லதல்ல என்றாலும் குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளதால் கெடுபலன் குறையும்.  

ராகு தற்போது 9-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் முயற்சியில் தடை உருவாகலாம். கேது 3-ம் இடமான மகரத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். அதாவது இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார்.  நீண்ட கால நோயை, கூட குணமாக்குவார்.

2018 ஜனவரி – 2019 பிப்ரவரி திறமையில் பின்தங்கிய நிலை இனி இருக்காது. கேது, இறை அருளையும் பொருள் உதவியையும் கொடுப்பார். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர் ஆசியும், அருளும் கிடைக்கும். 2018 பிப்.14க்கு பிறகு நற்பலன் சற்று குறையும். ஆனாலும் குருவின் பார்வை பலத்தால் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.  
பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, -மனை வாங்க யோகம் கூடி வரும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரிகளின் இடையூறு குறுக்கிடலாம்.  கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம்
அனுசரித்துப் போகவும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.   2018 பிப்.14 க்கு பிறகு பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.  அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். குருவின் பார்வை பலத்தால் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம்.  

கலைஞர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.  தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும்.

விவசாயிகள் நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை.

குருபகவானின் 9-ம் இடத்து பார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.  குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணம் பெறுவர்.

2019 மார்ச் – 2020  மார்ச் குருபகவான் 2019 மார்ச் 10-ல்  விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.  இது சிறப்பான நிலை தான். ஆனால் அவர் 2019 மே 19- முதல் அக்.27- வரை வக்ரம் அடைந்து உங்கள் ராசியில் இருக்கிறார்.

அப்போது அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. ராகு  இப்போது  8-ம் இடத்திற்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. உறவினர் வகையில்  பிரச்னை உருவாகலாம். முயற்சியில் தடை குறுக்கிடலாம். கேது இப்போது இடம் மாறி 2-ம் இடத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.

தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையுடன் தொழிலில் முன் னேற்றம் காணலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அச்சகம், பத்திரிகை, பப்ளிகேஷன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் வளர்ச்சி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஆனால் மனைவி அல்லது குடும்பத்தினர் பெயரில் தொழில் தொடங்குவது நல்லது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.  சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும்.
பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று கல்வி வளர்ச்சி காண்பர்.  
விவசாயிகளுக்கு நெல், கோதுமை, கொண்டைக்கடலை, கேழ்வரகு போன்ற தானியங்கள் மூலம் மகசூல் அதிகரிக்கும்.  புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர்.  சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கண் தொடர்பான உபாதை வரலாம். சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

2020 ஏப்ரல் – டிசம்பர் சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும்.  வீண்விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே ஒற்றுமை நீடிக்கும். உறவினர் வகையில் ஓரளவு அனுகூலமான போக்கு காணப்படும்.   குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.   பணப்பொறுப்பை மற்றவரை நம்பி  ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபார முயற்சியை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியான பயணத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. பணியாளர்களுக்கு கடந்த காலத்தை விட வேலைப்பளு அதிகரிக்கும்.    சிலருக்கு வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அதே நேரம் குரு வக்ரகாலத்தில் சம்பள, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தை முயற்சியின் பேரில் பெறலாம்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே முன்னேற்றம்  உண்டாகும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்கள் திருப்திகரமான வாழ்வு நடத்துவர்.  குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். குரு வக்ரகாலத்தில் நற்பலன் அதிகரிக்கும்.

பரிகாரப்பாடல்

சுரும்பு முரல் கடிமலர்ப்பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
சுரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப்
பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற் கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம்
சிலம்பும் அடிகள் போற்றி

பரிகாரம்
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● பவுர்ணமி மாலையில் அம்மனுக்கு மாவிளக்கு

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar