Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை ஐயப்பன் கோவிலில் மண்டல ... வனபோஜன உற்சவம்: கோசாலையில் வீரராகவர் எழுந்தருளல் வனபோஜன உற்சவம்: கோசாலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் ராஜகோபுரம் பணி, ’விறுவிறு’
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவில் ராஜகோபுரம் பணி, ’விறுவிறு’

பதிவு செய்த நாள்

14 டிச
2017
12:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணிகள், ஒன்பது நிலைகள் முடிந்து, மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்டிற்குள், ராஜகோபுரம் பணிகள் முழுமையாக நடந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக, திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநில பக்தர்கள், வந்து செல்கின்றனர். தினமும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், முருகன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009 நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்திற்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.

கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்கு பின், ஏப்ரல்- - மே மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் துவங்கின. ராஜகோபுர பணிகள், தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்ஹாரத்தின் மீது, ஒன்பது நிலை கோபுரங்கள் கட்டும் பணி, கடந்த மாதம் முடிவடைந்தது. தற்போது, ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியும் பொம்மைகள் அமைக்கும் பணியும் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகளை, ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஆகஸ்டிற்குள், ராஜகோபுரம் பணிகள் முழுமையாக நடந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar