Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி வழிபடும் முறையும் ... கங்கை நதிக்கரை நகரங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கங்கை நதிக்கரை நகரங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டை, தென்காசியில் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டை, தென்காசியில் வரவேற்பு

பதிவு செய்த நாள்

16 டிச
2017
10:12

தென்காசி: செங்கோட்டை, தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்பனின் திருஆபரணப்
பெட்டிக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

கேரள மாநிலம் அச்சன்கோவில் அரசன் ஐயப்பன் கோயிலில் ஆண்டு மகோத்சவ 10 நாள் திருவிழா இன்று (16ம் தேதி) துவங்குகிறது. திருவிழாவின் போது ஐயப்பனுக்கு திருஆப ரணங்கள் அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்.

திருஆபரணப் பெட்டி பாதுகாப்பிற்காக புனலூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மகோத்சவ விழாவிற்காக இப்பெட்டி வெள்ளிக்கிழமை கருவூலத்தில் இருந்து, சிறப்பு வாக னம் மூலம் புளியரை, செங்கோட்டை, தென்காசி, பண்பொழி, மேக்கரை வழியாக கேரள மாநிலம் அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழியில் செங்கோட்டை மற்றும் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்சிறப்பான வரவேற்பு அளித்துதரிசனம் செய்தனர்.

திருஆபரணப் பெட்டியுடன் கேரள தேவசம் போர்டு ஆணையர் சுமங்கலா, அச்சன்கோவில்
நிர்வாக அலுவலர் வினு, ஆலோசனைக்குழுத் தலைவர் சத்தியகீரன்பிள்ளை, செயலாளார்
உன்னிகிருஷ்ணன், துணைத் தலைவர் கோபி, புனலூர் டி.எஸ்.பி. கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்தனர்.

அச்சன்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மதியம் ஐயப்பனுக்கு
சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

வரும் 24ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி ஆராட்டு விழாவும் நடக்கிறது. விழாவின் போது காலை, மாலை, இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சி மற்றும் கருப்பன் துள்ளல் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar