Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு ... தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் எமன் கோவில் தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் எமன் கோவில்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை நதிக்கரை நகரங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கங்கை நதிக்கரை நகரங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

பதிவு செய்த நாள்

16 டிச
2017
10:12

புதுடெல்லி: கங்கை நதிக்கரையோர நகரங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன் பாட்டிற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

ஹிந்துக்களின் புனிதமான, கங்கை நதி மாசடைந்து வருவதை தடுக்கவும், நதியை தூய்மை ப்படுத்தவும், மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக, மத்திய அரசில், தனி அமைச்சரவையே உருவாக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ள ப்படுகின்றன.

இந்நிலையில், டில்லியில் செயல்படும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சுற்றுச்சுழல் ஆர்வலர், எம்.சி.மேத்தா விடுத்த கோரிக்கையை அடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்ப னை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையை மீறி பயன் படுத்துவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், ""விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், ""என, பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி, ஸ்வந்திர குமார் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன்னரும், கங்கை நதிக்கரை நகரங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த, பசுமை  தீர்ப்பா யம் தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த உத்தரவு, முழு அளவில் பின்பற்றப்படவில்லை. மாசு அதிகரித்ததை அடுத்து, அபராதம் விதித்தது, இந்த முறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கங்கை நதிக்கரையில், பிளாஸ்டிக் மாசு படிப்படியாக குறையும் என, எதிர் பார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar