Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சனிப்பெயர்ச்சி விழா; கல்பட்டில் ... மயிலம் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2017
01:12

திண்டிவனம் : திண்டிவனத்திலுள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சனிப்பெயர்ச்சி நடந்தது. திண்டிவனம் வாசவி கிளப் மற்றும் வனிதா கிளப் சார்பாக சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை கோவில் வளாகத்திலுள்ள சனிபகாவனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு செயலாளர் பி.ஆர்.எஸ். துணிக்கடை ரங்கமன்னார், வாசவி கிளப் துணை ஆளுநர்கள் சிவக்குமார், வெங்கட்ரமணன், சங்கர், வட்டார தலைவர் மனவளக்கலை பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சீனிவாச அய்யர், கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், காலை 9:59 முதல் சிறப்பு யாகம் நடந்தது. இதில் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பரிகார ராசிகளுக்கு மஹா ஹோமமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன், அனந்தராமன் ஆகியோர் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:01 மணிக்கு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பரிகார அர்ச்சனைகள் நடந்தது. அம்பிகேஸ்வர குருக்கள் பூஜைகளை செய்து வைத்தார். மேலும் ஏமப்பேர் விஸ்வநாதர், கள்ளக்குறிச்சி கங்கையம்மன் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, , நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், செம்பொற்சோதிநாதர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், தென்கீரனுார், முடியனுார் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சனிப்பெயர்ச்சி வைபவம் நடந்தது.

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார்‚ அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் உள்பிரகாரத்தில் சனிபகவான், காக்கை வாகனத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக காலை 7:00 மணிக்கு‚ விசேஷ மகா அபிஷகம்‚ பரிகார பூஜைகள்‚ புஷ்பார்ச்சனை‚ விசேஷ ஹாமங்கள் நடந்தது. திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7:00 மணிக்கு‚ மூலமூர்த்திகளுக்கு மகா அபிஷகம் நடந்தது. தொடர்ந்து 9:45 மணிக்கு‚ நவக்கிரகங்களுக்கு மகா அபிஷகம்‚ 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

சங்கராபுரம்: சங்கராபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதே போல் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில், சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar