Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் ... சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
10:01

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதசுவாமி கோயிலில் மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இக்கோயிலில் டிச., 24ல் ஆருத்ரா தரிசன விழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆருத்ரா தரிசனத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தன.

பின்னர் சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின், அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, மலர்களால் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar