Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ரமணரின் 138வது ... மாகாளியம்மன் விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் மாகாளியம்மன் விழாவை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழியும் நிலையில் பல்லவர் வரலாற்று சின்னங்கள்
எழுத்தின் அளவு:
அழியும் நிலையில் பல்லவர் வரலாற்று சின்னங்கள்

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
12:01

மதுராந்தகம் : பல்லவர் கால, 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்களை காப்பாற்ற வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் தாலுகா விராலுார் ஊராட்சிக்கு உட்பட்டது நாகமலை. இக்கிராமத்திற்கு, கிழக்கு கடற்கரை எல்லையம்மன் கோவிலில் இருந்து, சித்தாமூர், செய்யூர் வழியாக செல்லலாம்.இங்கு, பஞ்ச பாண்டவர்மலை, குறத்தியர் மலை, கருப்பங்குன்று என பல பெயர்களில் மலைகள் உள்ளன. இந்த மலைகளில் சமண துறவியர்கள் தங்கி அறப்பணிகளை செய்ததற்கான, பல சான்றுகள் உள்ளன. ஏறத்தாழ, 1,300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கல்வெட்டு சான்றுகளுடன், பல்லவர் கால குடவரைக்கோவில் உள்ளது.

மூலிகை அரைக்கப் பயன்படும் மருந்துக் குழிகள், துறவியர் உறங்க கற்படுக்கைகள், மழை நீர் உட்புகாமல் தடுக்கும் அணைகள் இங்குள்ளன.இயற்கையாய் அமைந்த குகைப்பள்ளி, கட்டட எச்சங்கள், சமண தீர்த்தங்கரர் திருமேனிகள் என, பல சமணம் சார்ந்த தடயங்கள் காணப்படுகின்றன.தமிழ் மொழியைத் தாய்மொழியாக கொண்ட சமண மதத்தினர், மாதந்தோறும் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.பல்லவர் கால கலைச் சிற்பங்கள் நிறைந்து விளங்கும் மாமல்லபுரம் அருகில் இம்மலை உள்ளது.ஆராய்ச்சி நோக்கத்திற்காக வருவோர், உயர்கல்வி மாணவர்கள் மற்றும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.இப்படி வரலாற்று தொல்லியல் பின்னணி நிறைந்த நாகமலை, சிறிது சிறிதாக அழியும் தருவாயில் உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த கல்வெட்டு, சமண தடயங்களையும், பாதுகாக்கப்பட்ட சின்னமாக தொல்லியல் துறையினர் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அழியும் ஆபத்தில் உள்ள, பல்லவர் கால வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என, தொல்லியல் துறை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar