Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை எருமேலி பேட்டை துள்ளல் - 12-ல் ... சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டு பெண்கள் நேர்த்திக்கடன் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூர் குண்டம் திருவிழா: பூமிதிக்க பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாரியூர் குண்டம் திருவிழா: பூமிதிக்க பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
05:01

கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டம் திருவிழா, நாளை (ஜன.11ல்) கோலாகலமாக நடக்கிறது. ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 2017 டிச., 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் பூ மிதிக்கும் பக்தர்கள், விரதம் கடைபிடித்து வருகின்றனர்.  

விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டமிறங்கும் நிகழ்ச்சி நாளை (ஜன.11ல்) கோலாகலமாக நடக்கிறது. பூமிதிக்கும் பக்தர்கள் கடந்த இரு நாட்களாக, கோவில் வளாகத்தில் வரிசையில் காத்துள்ளனர். அதன்படி ஆண்கள் வரிசையில், வாய்க்கால் ரோட்டை சேர்ந்த மூர்த்தி என்பவர், பூச்சாட்டு முதலில் இருந்து வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதேபோல் பெண்கள் பிரிவில், பச்சமலை ரோட்டை சேர்ந்த சாந்தி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.  மேலும், சத்தியமங்கலம், பெருந்துறை, சிவகிரி, ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் அமர்ந்துள்ளனர். இன்று காலை, 10:30 மணிக்கு மாவிளக்கு காப்பு கட்டுதல் முடிந்ததும், அம்மன் பூத வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விேஷச பூஜையில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் கண்காணிப்பில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் தலைமையில் மொத்தம், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar