Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யர்மலை அடிவாரத்தில் பாரம்பரிய ... மலையாண்டர் கோவிலில் தெப்பல் உற்சவம் மலையாண்டர் கோவிலில் தெப்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வது நாளாக ஜீயர் உண்ணாவிரதம்
எழுத்தின் அளவு:
வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வது நாளாக ஜீயர் உண்ணாவிரதம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
12:01

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் இருந்து வரும் உண்ணாவிரதம் இன்று(ஜன.,18) இரண்டாவது நாளாக தொடர்கிறது. ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து இந்து அமைப்புக்கள் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. வைரமுத்து மீது விருதுநகர் மற்றும் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ’வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது. அதில் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரீனாவில் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையில், வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள் கூறி இருந்தார். ஆனால் தற்போது வரை வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்காததால் நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தை ஜீயர் தொடர்கிறார்.

பேச்சுவார்த்தை: உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி, அறநிலை துறை உதவி கமிஷனர் ஹரிஹரன் மற்றும் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஜீயர் சுவாமிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar