Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மன் கோவில் ... ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருவூறல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருவூறல் உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
12:01

சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவூறல் உற்சவம், இன்று நடக்கிறது. திருவிழாக்கள் இல்லாத நாளில், சுவாமி ஆற்றங்கரையில் ஓய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு, திருவூறல் உற்சவம் எனப்படுகிறது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உற்சவர், திருவூறல் உற்சவத்தின் போது, திருவல்லிக்கேணியில் இருந்து, ஈக்காட்டுத்தாங்கலில், அடையாறு ஆற்றங்கரை வரை சென்று திரும்புவார். இந்த ஆண்டிற்கான திருவூறல் உற்சவம், இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை வழியாக, காலை, 11:30 மணிக்கு, ஈக்காட்டுத்தாங்கல் ஆற்றங்கரையை அடையும். அங்கு, அவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து மாலை புறப்பட்டு, இரவு கோவிலை வந்தடைகிறார். வீதி உலாவின் போது, வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு, பெருமாள் தரிசனம் தரும் வகையில், மண்டகப்படி எனும் நடைமுறை உள்ளது. இம்முறை உற்சவர் சிலை சிதிலமடைந்து வருவதாகவும், அதன் காரணமாக, கோவில் நிர்வாகம் மண்டகப்படியை நிறுத்த முடிவு செய்தது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், சமீபத்தில் கோவிலில் நடந்தது. இக்கூட்டத்தில், இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள், மண்டகப்படிதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஒருசில மாற்றங்களுடன், மண்டகப்படி தொடர்வது என, கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar