அக்னி வழிபட்ட சிவன் “அக்னீஸ்வரர்” என்னும் பெயருடன் குத்தாலம் எனும் தலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு வாழ்ந்த பரத மகரிஷி, பார்வதி தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டுமென யாகம் நடத்தினார். சிவனருளால் யாகத்தீயில் அம்பிகையை குழந்தையாக தோன்றினாள். பரிமள சுகந்தநாயகி என பெயரிட்டு மகரிஷி வளர்த்தார். அம்பிகையை மணம் புரிய விரும்பிய சிவன், மகரிஷியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் சம்மதிக்க, நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது. இதனால் இக்கோயிலை “நிச்சயதார்த்த கோயில்” என சொல்வர். நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பிரச்னையின்றி திருமணம் நடந்தேற பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கி.மீ., தொடர்புக்கு: 94435 64607, 94878 83734