Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சண்முகநாதன் கோயில் தைப்பூச ... மாரியம்மனுக்கு சீர் வழங்கும் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பர் கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2018
02:01

குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவில் தைப்பூசம் திருவிழா இன்று நடக்கிறது. இதில், எட்டு கோவில் சுவாமிகள் பங்கேற்கின்றன. கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூசம் திருவிழா இன்று நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள், சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 5.00 மணியில் இருந்து 5.30 மணிக்குள், தீர்த்தவாரி நடக்கிறது. இதில் எட்டுகோவில்களில் இருந்து, சோமாஸ்கந்தர் அம்பாளுடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார்.

இதில் கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்யார்ஜூனேஸ்வரர். அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், கருப்பத்தூர் சுகந்தகுந்தாளம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வார் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்யார்ஜூனேஸ்வரர், திருஈங்கோய் மலை, மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர், வெள்ளுர் சிவகாமி உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் சுவாமிகள் பங்கேற்கின்றன. நாளை காலை, 10:00 மணியளவில் சுவாமிகள் சந்திப்பு, புறப்பாடு நடக்கிறது. இத்திருவிழாவில், கலெக்டர் கோவிந்தராஜ், டி.ஆர்.ஓ., சூரியபிரகாஷ், எஸ்.பி., ராஜசேகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குநர் சூரிய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் இ.ஓ.,க்கள், பணியாளர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar