Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் ராஜகாளியம்மன் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்க ரதம் பராமரிப்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
350 ஆண்டு கால ஓலைச்சுவடிகள் : பழநி அருகே கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
350 ஆண்டு கால ஓலைச்சுவடிகள் : பழநி அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

03 பிப்
2018
11:02

பழநி: பழநி அருகே கோதைமங்கலம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான, முருகக் கடவுளை வாழ்த்தும் காவடிப்பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி யுவராணி, தனதுவீட்டில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளதாக, வரலாற்று ஆசிரியர், ராஜேஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் தமிழாசிரியர் நந்திவர்மன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஓலைச்சுவடியை ஆய்வு செய்தபோது 350 ஆண்டுகளுக்கு முந்தையது எனத்தெரியவந்துள்ளது. அதில் இரண்டு பக்கங்களிலும் பழநிமலை முருகனை பற்றி காவடிசிந்தாக 100 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது
:தங்களது தாத்தா காலத்தில் இருந்து வீட்டில் ஓலைச்சுவடிகள் உள்ளதாக மாணவி தெரிவித்தார். அதனை ஆராய்ந்தபோது, ஒரு அடிநீளமும், 4 செ.மீ., அகமும் கொண்டதாக உள்ளது. 50 சுவடிகளில் பழநி மலை முருகன்மேல் காவடிச்சிந்தாக பாடல் எழுதப்பட்டுள்ளது.பாடல்கள் எளிய நடையில், முருகனின் வாழ்க்கை வரலாறு, காவடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள், மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் பற்றியும் அந்த நோய்கள் காவடி எடுப்பதால் தீரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பழநி மட்டுமின்றி திருச்செந்துார் முருகன் குறித்தும் பற்றி 10 பாடல்கள் உள்ளன. ஓலைச்சுவடி இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பட்டன், ஆங்கிலேயர் காலத்து மன்னரின் புகைப்படம் அழிந்தநிலையில் உள்ள நாணயம் போல உள்ளது. சந்தம், எழுத்து அமைப்பு, ஓலைச்சுவடியின் பழமை கொண்டு ஆராய்ந்ததில் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஓலைச்சுவடி பாடல்களை நுாலாக வெளியிட்டபின், பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar