Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் மத்திய பாதுகாப்பு ... இடித்த கோவிலை மீண்டும் கட்டித்தர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏலகிரிமலையில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
01:02

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, மங்களம் கிராமத்தை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் நீலமேகம் ஆகியோர் சேர்ந்து, ஏலகிரிமலை, அத்னாவூரில், புலிக்குத்திப்பட்டான் என்ற நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஏலகிரிமலை அத்னாவூரில் காணப்பட்ட புலிக்குத்திப்பட்டான் நடுகல், ஐந்தடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகள், பொதுமக்களை கொன்று வந்த புலியை எதிர்த்து போரிட்டு, அதை கொன்று, தானும் இறந்த வீர மறவனுக்கு அவ்வூர் மக்கள் நடுகல் அமைத்து தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். வீரனின் உருவம் பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைதிகளில் வாள்களை ஏந்திய வீரன், ஆவேசமாக புலியுடன் போரிட்ட போது, இடது கையை புலி கவ்வியுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீரனுக்கு திருமணம் நடந்த நாளன்று, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த புலியை, திருமண கோலத்தில் சென்று போரிட்டு புலியை கொன்று தானும் இறந்துள்ளான். இதனால் இந்த வீரன், ஊரை காக்க உயிர் வீட்ட வீரமறவனாவான். இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையின் போது, இவ்வீரனுக்கு மரியாதை செலுத்தினர். இந்த நடுகல் கி.பி., 10ம் நூற்றாண்டு பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாகவும். மேலும், ஏலகிரிமலையில், ஒரு காலத்தில் கொடிய புலிகள் வசித்து வந்ததற்கு, இந்த நடுகல் சான்றாகவும் விளங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar