Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலுக்குள் எந்த கடைகளும் கூடாது சிவன் கோவில்களில் தொடரும் தீ விபத்துகள்: வெள்ளி சபையை தொடர்ந்து ரத்தின சபையில்.. சிவன் கோவில்களில் தொடரும் தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 194வது உழவாரப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 194வது உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
05:02

சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள  கோவில்களில் 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய  பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், சுவாமியின் வாகனங்கள், வஸ்திரங்கள் சுத்தம் செய்தல், பூஜை பொருள்கள் துலக்குதல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதுவரை 193 கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.

இந்த உழவாரப்பணியில்  400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம்.  25.02.2018 ஞாயிறன்று திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, அடியார்கள் புடை சூழ திருக்கோயில்களின் துாய்மை–நலன்–பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவீதிவுலா, சென்னை குன்றத்துார் திருநாகேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு கந்தழீஸ்வரர் திருக்கோயில் வரை நடைபெறுகிறது.  இதை தொடர்ந்து 194வது  உழவாரப்பணி பாலவராயன் திருக்குளம், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கந்தழீஸ்வரர் திருக்கோயில், திருவூரகப்பெருமாள் திருக்கோயில், தெய்வ சேக்கிழார் திருக்கோயில் ஆகிய தலங்களில் நடைபெறுகிறது.  மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.

தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar