Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் மாசி சிவராத்திரி ... மானசரோவர் யாத்ரீகர்களுக்கு சீன அரசு அனுமதி மானசரோவர் யாத்ரீகர்களுக்கு சீன அரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று காலியாகும்
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று காலியாகும்

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
11:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்துக்கு காரணமான கடைகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று காலி செய்யப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் முடுக்கிவிட்டு உள்ளது. கோவிலின் நான்கு கோபுரங்களின் கீழ் பகுதிகள், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வீர வசந்தராய மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் நடத்தப்படுகின்றன.

வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இயங்கின. பிப்., 2 இரவு, 10:15 மணிக்கு, கடை எண்: 75, 76ல் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ, அருகில் உள்ள மற்ற கடைகளில் வேகமாக பரவியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கு காரணமான கடைகளை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்குள் காலி செய்யும்படி, கோவில் இணை கமிஷனர், நடராஜன் உத்தரவிட்டார்.கடைகளை காலி செய்ய அவகாசம், மாற்று இடம் ஒதுக்கும்படி, கடை உரிமையாளர்கள் கோரினர். இதை, இணை கமிஷனர் ஏற்கவில்லை. இதையடுத்து, கடை உரிமையாளர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கடைகளை, இன்று மதியம், 12:00 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் இன்று காலி செய்யப்படுகின்றன. தீ விபத்து நடந்த பகுதியில் உள்ள கடைகளை, பாதுகாப்புடன் காலி செய்ய, கோவில் நிர்வாகம், ஊழியர்கள், தீயணைப்பு குழுவினரை நியமித்துள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டப்படும், குன்னத்துார் வணிக வளாகத்தில், தங்களுக்கு கடைகள் ஒதுக்க, கலெக்டர் வீரராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர், அனீஷ் சேகர் ஆகியோர் மனது வைக்க வேண்டும் என, கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் ... மேலும்
 
temple news
கும்பகோணம்: நவகிரக கோயில்களில் ராகு பரிகார ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
கோவை மாவட்ட தாம்பிராஸ் பிராமணர்கள் சங்கம் சார்பில் மகாதேவா அஷ்டமி விழா, இடையர்பாளையம் வி. ஆர். ஜி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar