Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் மடப்புரம் கோயில் உண்டியல் எண்ணும் பணி மடப்புரம் கோயில் உண்டியல் எண்ணும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில் இடிபாடுகளை அகற்ற ஏற்பாடு
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோவில் இடிபாடுகளை அகற்ற ஏற்பாடு

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
12:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, பொதுப்பணித்துறை முன்னாள் முதன்மை பொறியாளர், பாலசுப்ரமணியன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஆய்வு செய்ததுமீனாட்சி கோவிலில், பிப்., 2 இரவு, 10:15 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில், வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 30க்கும் மேற்பட்ட கடைகள் சாம்பலாகின. தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய, பொதுப்பணித்துறை முன்னாள் முதன்மை பொறியாளர், பாலசுப்ரமணியன் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அரசு நியமித்தது. இக்குழு முதற்கட்ட விசாரணையை, பிப்.,8ல் நடத்தியது.குழுவினர், தீ விபத்து நடந்த பகுதியில் நேற்றும் ஆய்வு செய்தனர். வீரவசந்தராய மண்டபத்தின் கல்துாண்கள், மேற்கூரைகள் விழாமல் தடுக்க, 30 லட்சம் ரூபாயில், இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கும் பணி, நேற்றுடன் நிறைவடைந்தது.வீரவசந்தராய மண்டபத்தில் குவிந்துள்ள கட்டுமான கழிவுகளை, இன்று முதல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முழுமை பெற்றால் மட்டுமே, விசாரணைக்கு ஏதுவாக அமையும். அடுத்தடுத்து ஆய்வு செய்ய வசதியாக, தீயில் எரிந்த மின் ஒயர்களை அகற்றி வருகின்றனர்.தீயில் எரிந்த கடைகளில், எஞ்சிய பொருள் எதுவுமில்லை. விபத்தின் போதே அவை முழுமையாக எரிந்து விட்டன. உயர்மட்டக்குழு ஆய்வுக்கு வசதியாக, வீரவசந்தராய மண்டபத்தை, பளிச் என, வைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar