Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹா சிவராத்திரி திருவிழா: சிவன் ... விஷ்ணுபதி புண்யகால பூஜை கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
01:02

ஊட்டி:ஊட்டி காந்தள், காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஊட்டி காந்தள் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. காந்தள் ஆதிபராசக்தி மகளிர் குழு, ஊட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நேற்று காலை, 7:00 மணிக்கு கால சந்தி பூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பிற்பகல், 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு, மகா பிரதோஷம், மகா சிவராத்திரி வழிபாடு, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, மாலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஸ்ரீ சர்பேந்திர நாட்டிய வித்யாலய மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, ’ மனிதனை மனிதனாக்குவது பக்திப்பாடல்களா! பல்சுவைப்பாடல்களா!’ என்ற தலைப்பில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடந்தது. ஞானாநந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, தட்சிணாமூர்த்தி மடாலய அறங்காவலர் குழு; காசி விஸ்வநாதர் சுவாசி ஆலய முன்னேற்ற மற்றும் சேவா சங்கம்; காசி விசாலாட்சி அம்மாள் மகளிர் குழு; ஸ்ரீமான் ராயபோயர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

*மஞ்சூர் அடுத்துள்ள மணிக்கல், பாக்கோரை, எடக்காடு கிராமங்களில் பிரசித்த பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் நடப்பாண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களின் பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar