Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ... பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு பொதுத்தேர்வு எழுதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 15 நாட்களில் புனரமைப்பு பணி
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 15 நாட்களில் புனரமைப்பு பணி

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
11:02

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராய மண்டப புனரமைப்பு பணி, 15 நாட்களில் துவங்கும், என, மதுரையில் உயர்மட்ட குழு தலைவர், பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இக்கோவிலில், பிப்., 2ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீரவசந்தராய மண்டப மேற்கூரை, பழங்கால கற்துாண்கள் சேதமாயின.

2வது கட்ட ஆய்வு : விபத்திற்கான காரணத்தை அறியவும், புனரமைப்பு பணி மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், 12 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை, அறநிலையத் துறை நியமித்தது. இக்குழுவினர், கடந்த, 8ல் முதற்கட்ட ஆய்வு நடத்தினர். நேற்று காலை, 10:45 மணிக்கு, இரண்டாவது கட்ட ஆய்வு துவங்கியது. பழைய மண்டபத்தின் நிலை குறித்த ஆவண படத்தை வைத்து, எப்படி மீண்டும் அதே நிலைக்கு புனரமைப்பது என, ஆலோசனை நடத்தினர். பின், சேதம்அடைந்த மண்டப பகுதிகளை, மதியம், 2:00 மணி வரை ஆய்வு நடத்தினர்.

ஆவணப்படம் : உயர்மட்ட குழு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறியதாவது:வீரவசந்தராய மண்டபத்தின் புனரமைப்பு பணிக்காக, ஆவணப்படம் தயாரித்துள்ளோம். ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு இன்றி, இடிபாடுகளை அகற்றுகின்றனரா என, ஆய்வு செய்யப்பட்டது. மண்டபத்தில் நான்கு கற்துாண்கள், மேற்கூரை, பக்கவாட்டு சுவர்கள் மட்டுமே சேதமடைந்து உள்ளன. கோவில் நிதியில், புனரமைப்பு பணி, 15 நாட்களில் துவங்கும். இதற்கான ஆய்வு அறிக்கை நகல், அறநிலையத் துறை கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar