Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாம் முடிந்து திரும்பியது! திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டு அழைப்பிதழ் வெளியீடு
எழுத்தின் அளவு:
அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டு அழைப்பிதழ் வெளியீடு

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
04:02

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தினம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டின் அழைப்பிதழை தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வெளியீட்டு அருளா சி வழங்கினார்.

தருமை ஆதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை, சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரி ஆகியவை இ ணைந்து வரும் மார்ச் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நான்கு நாட்கள் சென்னை அரும்பாக்கம் வைணவக்கல்லூரி வளாகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த 5வது மாநாட்டை நடத்து கின்றனர். இதில் வேத, ஆகம, புராண, இதிகாச, சங்க இலக்கிய, திருமுறை, சாத்திரங்களில் சைவ சித்தாந்தச் செம்பொருள் குறித்து விவாதிக்க உள்ளனர். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டின் அழைப்பிதழ் வெளியீட்டு விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டின் புரவலர் தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மாநாட்டு பத்திரிக்கையை வெளியிட்டு அருளாசி வழங்கிபேசுகையில் நமது பாரதநாடு பழம்பெரு நாடும்.

நமது பிள்ளைகளுக்கு சமையம், சித்தாந்தம் பற்றி கற்றுகொடுப்பதோடு, நல்ல பழக்க வழங்கங்களையும் கற்றுகொடுக்கவேண்டும். பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று வாழ க்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபடவேண்டும். இளைய தலைமுறையினர் சமய உணர்வோடும், தெய்வ பக்தியுடன் இருக்க வேண்டும். சென்னையில் வரும் மார்ச் 8 ம் தேதி முதல் 11ம் தேதி வரை நான்கு நாட்கள் அரும்பாக்கம் வைணவக்கல்லூரியில் ஐந்தாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சை வ ஆதீனகர்த்தர்கள், காஞ்சி சங்கராச்சாரியாரக்ள் சுவாமிகள்,தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், கேரள ஆளுனர் சதாசிவம், நீதிபதிகள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண ன்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மலேசியா, இலங்கை, கடனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிஷீயஸ், ஐரோப் பா, போன்ற பல நாடுகளில் இருந்து சமய அமைப்பச் சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டிற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டி ன் நினைவாக சிறப்பு மலர், கருத்தரங்க கட்டுரை மலர், சிறப்பு வெளியீடாக 22 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. இதில் திரளானோர் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.  பத்திரிக்கை வெளியிட்டு விழாவில் மாநாட்டு தலைவர் தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மாநாட்டு செயலாளர்கள் செல்வ நாயகம், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, இணை செயலாளர் சாமிநாதன், ஆதீன கல்லூரி தமிழ்த்துறை தலை வர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar