Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி சங்கராச்சாரியார் ... திருக்கோஷ்டியூர் தெப்பம்: பக்தர்கள் வருகை துவக்கம் திருக்கோஷ்டியூர் தெப்பம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் மாசிமக உற்சவம்: பஞ்சமூர்த்திகள் தேரில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2018
10:02

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழாவில், இன்று பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள் (பாலாம்பிகை, விருத்தாம்பிகை), சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, பல்லக்கில் வீதியுலா, இரவு சூரிய பிரபை, பூதம், நாகம், யானை, கமல வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

Default Image
Next News

முக்கிய நிகழ்வாக, ஒன்பதாம் நாள் உற்சவமாக இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4:30 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தேரடியில் அலங்கரித்த திருத்தேர்களில் பஞ்சமூர்த்திகள் அதிகாலை 5:15 மணியளவில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 6:20 மணிக்கு ஆழத்து விநாயகர் தேர் புறப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நமசிவாய கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தொடர்ந்து, சண்முக சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள், சண்முக சுப்ரமணியர் தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக தேரோடும் வீதிகளில் வீதியுலா வந்தன. பல ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மறுநாள் 11ம் நாள் உற்சவமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மன் குளத்தில் தெப்ப உற்சவம், 12ம் நாள் நிறைவாக சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar