Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் ... மாசி மக திருவிழா: பல்லக்கு ஊர்வலம் மாசி மக திருவிழா: பல்லக்கு ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசிமகம்: கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2018
12:03

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரியில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Default Image
Next News

மாசிமாத விழாவினை முன்னிட்டு கடந்த 20ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 5 சிவாலயங்களில் பத்துநாள் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக  காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். பின்னர் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

தேரோட்டம்: மாசி மகத் திருவிழாவின் ஒரு பகுதியாக வைணவத் தலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோவில்களில் கடந்த 21 ம் கொடியேற்றப்பட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை சக்கரபாணிசுவாமி உபநாச்சியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இத்தேரில் பழங்கள், காய்கறிகள், மஞ்சள், பனை உள்ளிட்ட 108 மங்கள் பொருள்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar