Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முனீஸ்வரன் கோவில் பல்லக்கு உற்சவம்: ... கும்பாபிஷேகம் தீர்த்தக்குட ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியாண்டியம்மன்-மாரியம்மன் கோவில் பொங்கல் விழா:
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2018
02:03

பவானி: பவானியில், செல்லியாண்டியம்மன்-மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. பக்தர்கள் உடலில் சேறு பூசியும், வேடமணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம், பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன்- மாரியம்மன், மற்றும் எல்லையம்மன் கோவில்களில், ஆண்டுதோறும் மாசி பொங்கல் தேர்த்திருவிழா வெகு விமரிமைசயாக நடைபெறும். இந்தாண்டு கடந்த, 13ல், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 20ல், மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டு, மறுநாள் செல்லியாண்டியம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர். முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல், நேற்று காலை, 10:00 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து குதிரை ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள எல்லையம்மன் கோவில் சென்று, அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பல்வேறு வண்ணங்களில் பல வகையான வேடங்கள் அணிந்தும், தங்களது உடம்பில் சேறு பூசியும், ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, வழிநெடுகிலும் உள்ள பெண்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம், காய், கனிகள், தண்ணீர் பாக்கெட், குளிர்பானம், பிஸ்கட், மிட்டாய், புதுதுணிகள், பேனா, பேன்ட் சர்ட் உட்பட பல்வேறு வகையான பொருட்களை வீசினர். பின்னர், பக்தர்கள் சிலர் அலகு குத்தியும், அக்னி சட்டி ஊர்வலம் நடத்தினர். இன்று காலை, 9:00 மணியளவில் செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம், இரவு, 8:00 மணிக்கு மாரியம்மன், மேற்கு தெரு மாரியம்மன், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில்களின் கம்பங்களை, ஊர்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விடப்பட உள்ளது. நாளை, பரிவேட்டை, 3ல் தெப்பஉற்சவம், 4 அன்று காலை, 9:00 மணியளவில் மஞ்சள் நீரோட்டத்துடன், மாசி திருவிழா முடிவிற்கு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar