Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யா வைகுண்டர் 186வது அவதார தின விழா ... எறிபக்த நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரேஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
01:03

சென்னை, சிதம்பரேஸ்வரர் கோவிலை, புனரமைக்க கோரி, அறநிலையதுறையிடம், பக்தர்கள் மனு அளித்தனர். சென்னை சூளையில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சென்னை, சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் போலவே, சென்னையில், ஆகாயத்தலமாக, இந்த கோவில் கட்டப்பட்டது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் செய்யப்படுவது போலவே, இந்த கோவிலிலும், ஸ்படிக லிங்கத்திற்கு, பூஜை செய்யப்படுகிறது. அங்கு போலவே, பிரம்மோற்சவம் மற்றும் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆகமவிதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். ஆனால், இந்த கோவிலில், 1986க்கு பின், இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.அதனால், கோவிலின் ராஜ கோபுரம், நவக்கிரக மண்டபம், கோவில் முகப்பு, எட்டு கல் துாண்கள் உள்ளிட்டவை சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இது குறித்து, நமது நாளிதழில், சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த கோவிலை ஆய்வு செய்த, அறநிலையத்துறை அதிகாரிகள், ’விரைவில், புனரமைப்பு பணிகள் துவங்கும்’ என, பக்தர்களிடம் கூறினர்.இந்நிலையில், பக்தர்கள் சிலர், அறநிலையத்துறை உதவி ஆணையரை சந்தித்து, ’கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடனே, புனரமைப்பு பணியை துவங்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர்.
- -நமது நிருபர்-

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar