Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெயிலில் திருக்கோஷ்டியூரில் தவித்த ... மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழ்பட்டு வரும் ஈஞ்சார் கோயில்: கவனம் கொள்ளுமா அறநிலையத்துறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாழ்பட்டு வரும் ஈஞ்சார் கோயில்: கவனம் கொள்ளுமா அறநிலையத்துறை

பதிவு செய்த நாள்

06 மார்
2018
11:03

சிவகாசி : சிவகாசி ஈஞ்சார் பகுதியில் கி.பி., 1236 ல் பாண்டிய மன்னரின் ஒருவரான, மறவன்மணி சுந்திரபாண்டியர் காலத்தில் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மூலவராக சிவன், சக்தியாக மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், அய்யனார் போன்ற 18 சுவாமி சிலைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது எந்த சிலைகளும் இல்லை. கோயிலை சுற்றி கலை நயமிக்க கல்வெட்டுகள், சித்திரங்கள், அழகோவிய சிலைகளும் உள்ளன. திறந்த வெளியில் நந்திபகவான் உள்ளார். கோயிலோ எந்த வித பராமரிப்பு இன்றி கேட்பாரற்று உள்ளது. சுற்றியும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. கட்டட சிலைகளோ துாசி படிந்து பாழ்பட்டுவருகிறது. கோயில் மூலவர் சன்னதி கீழ் பாதாள சுரங்கம் உள்ளது. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவி ஆண்டாள் கோயில் செல்ல வழியாக உள்ளது. பெருமை வாய்ந்த கோயிலை இந்து அறநிலைத்துறை கையகப்படுத்தி வசதி செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருடப்பட்ட சிலைகள்: ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கேட்பாரற்று உள்ளது. இங்குள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டு உள்ளன. 2017ல் மூலவர் சிலை திருடுப் போனது. திருத்தங்கல் போலீஸ் வழக்குப்பதிவு செய்தும் கண்டுபிடிக்கவில்லை. நந்தி சிலையை கடத்தமுயன்றபோது ,மக்கள் விரட்டி அடித்துள்ளனர். - பாண்டிசெல்வராஜ், வி.ஏ.ஓ.,

நடவடிக்கை எடுங்க: சிறுவயதில் கோயில் சுரங்கத்தை பார்த்திருக்கிறேன். தொல்லியல் துறை சுரங்கத்தை ஆராயலாம். ஈஞ்சார் கோயிலை சுற்றி தோட்டம், ரதவீதிகள், தாமரைக்குளம் என பெரிய நகரம் இருந்துள்ளது. மன்னர், போர் காலத்தில் சுரங்கம் வழியாக தப்பிக்கவும், மறைந்து வாழும் இடமாகவும்,பொன், பொருளை பாதுகாக்கும் இருப்பிடமாக இருந்துள்ளது. தற்போது இங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கோயிலின் புனிதத்தை காக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமசாமி, ஓய்வு சர்வேயர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar