Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலமடைந்த கோவிலில் பழங்கால ... பரமக்குடியில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் பரமக்குடியில் புதிய மரத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

06 மார்
2018
12:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நாளை (௭ம் தேதி) நடக்கிறது. இதற்காக, தேர் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 20ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 2ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி துவங்கி நடைபெறுகிறது. தினமும், பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற, பூவோடு எடுத்து, அம்மனை வழிபடுகின்றனர். கடந்த, 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை துவங்குகிறது.நாளை காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடும், காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அதன் பின், தேவஸ்தானம் சார்பில், அம்மனுக்கு சீர் வரிசை வழங்கப்படும். தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, 12 அடி உயரமுள்ள மரத்தேரில், விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளி ரதத்தில் மாரியம்மனும் எழுந்தருளி திரு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் தேர்த் திருவிழாவில், நாளை கோவிலில் இருந்து, மார்க்கெட் வீதி வழியாக வெங்கட்ரமணன் வீதியில் முதல் நாள் நிலை நிறுத்தப்படுகிறது.

நாளை மறுநாள், (8ம் தேதி) இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர் நிலையில் நிறுத்தப்படும்.மூன்றாம் நாளான, 9ம் தேதி தேர் நிலைக்கு வந்து சேருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும், 10ம் தேதி காலை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல்; மகா அபிேஷகமும் நடக்கிறது.தேரோட்டம் நிகழ்ச்சி நாளை துவங்குவதையடுத்து, வெள்ளித்தேர் மற்றும் மரத்தேர் புதுப்பிக்கும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar