Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூண்டி தேர்த்திருவிழா: வெள்ளியம்பல ... ஸ்ரீவி., மாரியம்மன் கோயில் பூக்குழி விழா துவங்கியது ஸ்ரீவி., மாரியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு சுவேதாரன்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவெண்காடு சுவேதாரன்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 மார்
2018
05:03

மயிலாடுதுறை: திருவெண்காட்டில் சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் சிவபெருமானின் அகோரமுகமான அகோரமூர்த்தி, தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் நவகிரகங்களில் புதன் பகவான் தனிசன்னதியில் எழு ந்தருளியுள்ளார். பிரம்மா இந்த கோயிலில் சுவாமி, அம்பாளை வழிபட்டு இழந்த ஞானத்தை பெற்றார் என்பது ஐதீகம். இங்குள்ள மூன்று குளங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை சரனடைந்தால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எமபயம் நீங்கும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க சுவேதாரன்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மா தம் இந்திரப் பெருவிழா நடை பெறுவதுவழக்கம். இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்ட ம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் நான்கு மாடவீதிகளையும் வலம்வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar