Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
1,000 ஆண்டு கோவிலில் உழவாரப்பணி உத்தரகோசமங்கையில் மோட்ச தீபம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்தபுரம் கோவிலில் ரூ.16 லட்சம் மண்டபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
01:03

அனுமந்தபுரம் : அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், காதணி விழாவிற்கு, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி, நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு அடுத்த, அனுமந்தபுரம் கிராமத்தில், புகழ்பெற்ற, அகோர வீரபத்திரர் கோவில், இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு வேண்டுதலுக்காக, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.விழாக்காலங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில், ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில், குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த ஏராளமானோர் வருகின்றனர். அப்போது, தனியார் திருமண மண்டபத்தை அதிக கட்டணத்தில் வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சிலர், கோவில் வளாகத்திலேயே காதணி விழாக்களை நடத்தி வந்தனர். இதனால், பக்தர்களுக்கும், விழா நடத்துபவர்களுக்கும், சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, காதணி விழா நடத்த, தனியாக மண்டபம் கட்ட வேண்டும் என, பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், மண்ணி வாக்கத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்ற பக்தர், காதணி விழா நடத்துவதற்கு, தன் சொந்த செலவில் மண்டபம் கட்டி தருவதாக, கோவில் செயல் அலுவலரிடம், விண்ணப்பம் அளித்தார். இங்கு, கட்டடம் கட்ட, கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், காதணி விழா நடத்துவதற்கு, கோவில் வளாகத்தில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்பணிகள், ஆறு மாதத்தில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar