Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி திருவேங்கடமுடையான் ... சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி உண்டியலில் ரூ.25 கோடி செல்லாத நோட்டுகள்
எழுத்தின் அளவு:
திருப்பதி உண்டியலில் ரூ.25 கோடி செல்லாத நோட்டுகள்

பதிவு செய்த நாள்

16 மார்
2018
12:03

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில், ஏழுமலையான் கோவில் உள்ளது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தினமும், கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் வசூலாக கிடைக்கிறது. இந்த தொகை, உடனுக்குடன், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான, 2016 நவ., 8க்கு பின், பக்தர்கள், உண்டியலில் காணிக்கையாக செலுத்திய, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், தேவஸ்தானத்தின் சார்பில் தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகள், தேவஸ்தானத்தின் கைவசம் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், பக்தர்கள், உண்டியலில் செலுத்திய, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை தனியாக பராமரித்து வருகிறோம். 25 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் உள்ளன.

பக்தர்கள், காணிக்கையாக செலுத்திய இந்த நோட்டுகளை, வங்கியில் செலுத்தி, செல்லத்தக்க தொகையாக மாற்ற அனுமதிக்கும் படி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் செலுத்திய தொகை என்பதால், இதை, செல்லத்தக்கவையாக மாற்ற, ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே நாளில் ரூ.4 கோடி: ஏழுமலையான் கோவிலில், நேற்று முன்தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், ஒரே நாளில், நான்கு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வியாபார நிறுவன உரிமையாளர்கள், தங்களுக்கு கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை, ஏழுமலையான் உண்டியலில் செலுத்தி வருவதால், முழு ஆண்டு கணக்கு முடிவின் போது, ஆண்டுதோறும் மார்ச்சில், உண்டியல் காணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar