Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யுகாதி பண்டிகை: சேலம் கோவில்களில் ... பழநி முருகன் கோவிலில் தங்க ரதம் 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் சேதமடைந்த பழமையான கோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில்  சேதமடைந்த பழமையான கோட்டம்

பதிவு செய்த நாள்

19 மார்
2018
01:03

கீழக்கரை: திருப்புல்லாணியில் இருந்து பிரப்பன் வலசை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையோரத்தில் உள்ள பழமையான கோட்டம் சிதிலமடைந்துள்ளது. வரலாற்றுச்சின்னங்களின் எச்சமாக உள்ள பழமையான சிறிய கட்டபனைமரங்களுக்கிடையேயும் மறைந்து வருகிறது.

உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணி, சேதுக்கரைக்கு செல்லும் யாத்ரீகர்கள், தினைக்குளம் வழியாக ரெகுநாதபுரம், தாமரைக்குளம், பிரப்பன் வலசை வழியாக ராமேஸ்வரம் செல்வதற்காக பக்தர்கள் முன்பு கால்நடையாகவும், குதிரை மற்றும் மாட்டு வண்டியிலும் பயணம் செய்துள்ளனர். வழித்தடங்களில் ஓய்வு எடுக்கவும், சிறு தெய்வங்களை வழிபட்டு செல்வதற்கு வசதியாகவும் கோட்டங்களை நிறுவியுள்ளனர். திருப்புல்லாணியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கே.ஞானசேகர் கூறியதாவது; ராணி மங்கம்மாள் சாலையோரத்தில் சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டு கோட்டமாக 7 அடி உயரத்திலும், 3 அடி அகலத்திலும்  உள்ள கட்டடம் 300 ஆண்டு பழமை வாய்ந்ததாகும்.  முன்பு இதன் வழியாக செல்லும் வழிப் போக்கர்களுக்கு வெளிச்சம் தரும் வகையில் எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.  காலப்போக்கில் இக்கட்டடம் பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து, வரலாற்றின் எச்சத்தின் மிச்சமாக உள்ளது. எனவே ராமநாதபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தால், மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar