Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் ... ராமேஸ்வரம் கோவிலில் பிரசாதம் நிறுத்தம் ராமேஸ்வரம் கோவிலில் பிரசாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி திருத்தாளமுடையார் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
சீர்காழி திருத்தாளமுடையார் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
11:04

மயிலாடுதுறை: சீர்காழி திருக்கோலக்காவில் உள்ள திருத்தாளமுடையார் சுவாமி கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தார். நாகை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்காவில் ஒசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயில் உள்ளது. 7 ம் நூற்றாண்டில் உமையம்மையிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் பெருமான், தனது தந்தையுடன் திருத்தாளமுடையார் கோயிலுக்கு எழுந்தருளிய போது கோயில் திருக்குளத்தில் மீன்கள் துள்ளி குதிப்பதை பார்த்து திருஞான சம்பந்தர் தனது கைகளை தட்டியவாறு திருப்பதிகம் பாடினார். அப்போது சிவபெருமான் குழந்தையின் பிஞ்சுகைகள் வலிக்குமே என திருஞானசம்பந்தருக்கு பொற்தாளம் வழங்கினார். பொற்தாளத்தை தட்டினால் ஓசை வரவில்லை. உடனே அம்மன் அதற்கு ஓசை வழங்கினார். ஆதலால் இக்கோயில் மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி அம்மன் என்றழைக்கப்படுகிறார். வாய் பேச முடியாத குழந்தைகள் இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம்செய்து அம்மனுக்கு தேன் நைவேத்தியம் செய்து தரிசித்து, அந்த தேனை உண்டால் சக்தியை பெறமுடியும். இதுபோல் இக்கோயிலில் வழிப்பாடு செய்து சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறனை பெற்றுள்ளனர்.

பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு தேமுதிக. தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் சுவாமி தரிசனம் செய்யவந்தார். மூலவர் திருத்தாளமுடையார் தரிசித்து பின்னர் ஓசைநாயகி அம்மனுக்கு தேன் வழங்கினார். தொடர் ந்து கோயில் கார்த்திகேய சிவச்சாரியார் வாக்குவாதினி மூல மந்திரம் பாராயணம் செய்து அர்ச்சனைகள் நடத்தி, தீபாராதனை செய்தார். பின்னர் அந்த தேனை சிவாச்சாரியார் விஜயகாந்த் வாயில் ஊட்டினார். விஜயகாந்துடன் அவரது மைத்துனரும், தேமுதிக துணை பொது செயலாளருமான சுதீஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar