Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாகைதொழுவு அம்மன் கோவிலில் யாக ... அஷ்ட பைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் தேர்த்திருவிழா வாணவேடிக்கை கோலாகலம்: பக்தர்கள் உற்சாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
12:04

உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வாணவேடிக்கை கோலாகலமாக நடந்தது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 20ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்., 5ம் தேதி தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை அடுத்து, நேற்றுமுன்தினம், காலை, 8:00 மணிக்கு மாரியம்மன் சுவாமிகளுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு செல்லும் வைபவம் துவங்கியது. பின்னர், உச்சிமாகாளியம்மன் கோவில், சத்திரம் வீதி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், காந்தி சதுக்கம் மாலை அம்மன் கோவில், பள்ளி வாசல் வீதி காமாட்சியம்மன் கோவில்களில் மண்டகப்படி நடந்தது. தொடர்ந்து, இரவு, 10:00 மணிக்கு அம்மன் குட்டைத்திடலை வந்தடைந்தார். வாணவேடிக்கை, இரவு, 10:30 மணிக்கு துவங்கி, 11:30 மணி வரை நடந்தது.

 பல்வேறு வண்ணங்களிலும் வானில் வெடிக்கும் பட்டாசுகள், பார்வையாளர்களை கவர்ந்தன. பல்வேறு பகுதிகளிலிருந்தும், மக்கள் திரண்டிருந்து வாணவேடிக்கையை கண்டு ரசித்தனர். நேற்று, திருவிழாவின் நிறைவாக, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. காலை, 10:30 மணிக்கு கொடி இறக்கப்பட்டு, காலை, 11:00 மணிக்கு மகாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.  மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar