Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உருத்திர கோட்டீஸ்வரர் கோவில் ... ஆதி முத்துமாரியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா ஆதி முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணகாந்தேசுவரர் கோவிலில் உழவார பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓணகாந்தேசுவரர் கோவிலில் உழவார பணி

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
11:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேசுவரர் கோவிலில், திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளையினர், உழவாரப்பணி செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை, 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இக்குழுவினர், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில், சைவ, வைணவ கோவில்களுக்கு சென்று உழவாரப்பணி செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள ஓணகாந்தேசுவரர் கோவில் குளத்தில், நேற்று முன்தினம் உழவாரப்பணி மேற்கொண்டனர்.குளத்தில் மண்டி கிடந்த புதர்கள், முட்செடிகளை அகற்றினர். முன்னதாக, உழவாரப்பணி துவங்கும் முன், காலையில், விநாயகருக்கு பூஜை செய்தனர். மாலையில், மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.அரிசி ஆலை அத்துமீறல்ஓணகாந்தேசுவரர் கோவில் தெப்ப குளத்தில், தனியார் அரிசி ஆலையின் கழிவுநீர் கலக்கிறது. இதனால், மழை பெய்து குளத்தில் தண்ணீர் தேங்கினாலும், அரிசி ஆலை கழிவுநீரால், குளத்து நீர் மாசுபடும் சூழல் உள்ளது. எனவே, ஆலை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar