Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் பராசக்திமாரியம்மன் ... பழநி முருகன் கோயிலுக்கு 91ம் ஆண்டாக தீர்த்தக்காவடி பழநி முருகன் கோயிலுக்கு 91ம் ஆண்டாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் ஆகமவிதி மீறவில்லை
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோவிலில் ஆகமவிதி மீறவில்லை

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
10:04

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படியே நடந்துள்ளன என, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பரஞ்ஜோதி கூறினார்.

திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோவிலில், வரும் 27ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில், கோவிலில் ஆகமவிதிகள் படி கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி கூறியதாவது:நெல்லையப்பர் கோவிலில், 150க்கும் மேற்பட்ட திருப்பணிகள், 4.92 கோடி ரூபாய் செலவில் உபயதாரர்களால் நேரடியாக நடந்துள்ளன. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் 20ம் தேதிக்குள் திருப்பணிகள் முடியும். திருப்பணிகளில் எவ்வித அவசரமும் காட்டவில்லை. ஆகம விதிகளையும் மீறவில்லை. இதுதொடர்பாக தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். கோவிலின் மேற்கு பிரகார திருப்பணிகளை நிறைவேற்ற, ஆறு மாத காலம் ஆகும். அப்பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை நடத்தினால், பல ஆண்டுகளாக நடக்கும் ஆனித் தேரோட்டம் தடைபடும். எனவே தான், அத்திருப்பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.ஆகம முறைப்படியே, 27ம் தேதி கும்பாபிஷேக நேரமும் காலை, 9:30 மணி முதல், 10:25 ஆக மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில், நெல்லையப்பர் சுயம்பு வடிவாக காட்சியளிக்கிறார். சுயம்பு லிங்கத்திற்கு ஆகமம் கிடையாது. காந்திமதியம்மன் கோவிலில், காமிக ஆகம முறைப்படி பூஜை காரியங்கள் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar