Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித ஜெபஸ்தியார் ஆலய தேர் பவனி தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
10:04

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக  துவங்கியது. உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் கோவில் வாளகத்தில் ஸ்ரீசந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி, இன்று காலை 7.30 மணி முதல் 8.00 மணிக்குள் மேளா,தாளம் முழுங்க, ஓதுவார்கள் திருமறைமந்திரம் ஓத கொடியேற்றம் நடந்தது.

பின்னர், கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதணை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து 2ம் நாள் திருவிழாவை முன்னிட்டு  நாளை 13ம் தேதி மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலும், 14ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் ஊர்வலும், 15ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை மேஷவாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 16ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், மாலை சுப்பிரமணியர் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரமும், மாலை சைவ சமயாச்சாரியார் நால்வர் புறப்பாடு நடக்கிறது. 18ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோவிலுக்குள் புறப்பாடு, மாலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடக்கிறது.  தொடர்ந்து, திருவிழாவின் 15ம் நாளான 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தியாகராஜர் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி, காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. தேரோட்டம் 4 ராஜவீதிகளில் சென்று தேர் மண்டபத்தை வந்தடைக்கிறது. வருகிற 29ம் தேதி மாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar