Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் ... இனி, கோவில்களில் அணையா தீபம்! இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு இனி, கோவில்களில் அணையா தீபம்! இந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூடாமணியம்மன் கோவில் தேர்த்திருவிழா: உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூடாமணியம்மன் கோவில் தேர்த்திருவிழா: உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
12:04

நாமகிரிப்பேட்டை: ஆர்.புதுப்பட்டி, கோவில் திருவிழாவில் தேருக்கு பின்புறம் உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர். புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. பங்குனியில், தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அப்போது, சுற்றுப்பகுதியில் உள்ள, 18 கிராமங்களில் திருவிழா தொடங்கிவிடும். இந்தாண்டு திருவிழா, கடந்த, 8ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அன்ன வாகனம், மறுநாள் சிம்மவாகனம், கடந்த, 10ல் குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை, தேரோட்டம் தொடங்கியது. முன்னாள் தலைவர்கள் நாமகிரிப்பேட்டை பொன்னுசாமி, ஆர். புதுப்பட்டி சுப்ரமணி, செயல் அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் தேர்வடம் பிடித்தனர். பக்தர்கள் உருளுதண்டம் போட்டு, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிறிது நேரத்தில் வீடுகளுக்கு முன் கொட்டியிருந்த மண் சாலையில் தேர் சக்கரம் மாட்டிக்கொண்டது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தேர் வழித்தடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

முகாம் நீதிமன்றம்:
திருவிழா நடக்கும், இரு நாட்களும் அரசு துவக்கப்பள்ளியில் முகாம் நீதிமன்றம் நடக்கும். இதில், பண்டிகையின்போது நடக்கும் சிறுசிறு சண்டை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அபாரதம் விதித்து, வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். நேற்று, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி முன்னிலையில், விசாரணை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar