Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாகாளியம்மன் பொங்கல் ... திருப்புல்லாணி சைத்ரோத்ஸவம் ஏப்.22ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவிலை புதுப்பிக்க ஆயலூர் மக்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
சிவன் கோவிலை புதுப்பிக்க ஆயலூர் மக்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
03:04

ஆயலுார்: திருவள்ளூர் அடுத்துள்ளது ஆயலுார் ஊராட்சி. அயர்ந்தநல்லுார் என்றழைக்கப்பட்ட இந்த ஊர் ,நாளடைவில் ஆயலுார் என, மாறியது. இங்கு, 500 ஆண்டுகளாக பழமையான சொர்ணாம்பிகை சமேத நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது.அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவில் பிரதோஷ வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது எனவும், அகஸ்தியர் முனிவர் பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 200 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாகவும், 50 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது.தமிழக அரசு மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கால பூஜை நடத்த உத்தரவிடப்பட்ட இந்த கோவிலில், தற்போது பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழமையான இந்த கோவிலை புதுப்பிக்க உபயதாரர்கள் மூலம், இரண்டாண்டுகளுக்கு முன், மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அறநிலைய துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், அப்போதே, திருப்பணிகள் துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்துள்ளது. ஆனால், அரசிடமிருந்து எவ்வித உத்தரவும் வராததால், பணிகள் துவங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.எனவே, விரைவில் இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறநிலையத் துறை அலுவலர் கூறுகையில், ஆயலுார் நீலகண்டேஸ்வரர் கோவிலை, தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்தி, திட்ட மதிப்பீட்டுடன் அறிக்கை அனுப்பியுள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar