Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகாசூரனுக்கு இன்று கும்பம் ... சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி சதுரகிரிமலைக்கு செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் 1,001ம் ஆண்டு விழா துவக்கம்: ஸ்ரீபெரும்புதூரில் தங்கப்பல்லக்கில் திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜர் 1,001ம் ஆண்டு விழா துவக்கம்: ஸ்ரீபெரும்புதூரில் தங்கப்பல்லக்கில் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

13 ஏப்
2018
10:04

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீராமானுஜரின், 1001ம் ஆண்டு திருஅவதார விழா நேற்று துவங்கியது. இதில், தங்கப்பல்லக்கில், ராமானுஜர் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர், வைணவ மகான் ஸ்ரீராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர்.ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.இங்கு, ஆண்டு தோறும் சித்திரை, திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜரின் திரு அவதார உற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, ராமானுஜரின், 1001ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழா நேற்று துவங்கியது.

காலை, 4.30, மணிக்கு மஞ்சத்திலிருந்து சுவாமி புறப்பட்டு, தங்க மண்டப ஊஞ்சலை சென்றடைந்தார். இதையடுத்து, ஒய்யார நடையில், வாகன மண்டபத்திலிருந்து, தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. அதன் பின், நான்கு மாட வீதிகளில் சுவாமி திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மதியம், ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு,திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தம், திருமண்காப்பு திவ்ய பிரபந்த சேவை சாத்துமுறை தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலை, மங்களகிரி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 11:00 மணி முதல், 12:00 மணி வரை ஏகாந்த சேவை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar