Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ஏர் பூட்டும் ... நத்தத்தில் மாரியம்மன் நகர்வலம் நத்தத்தில் மாரியம்மன் நகர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் விளக்கு மாடம் அமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் விளக்கு மாடம் அமைக்கப்படுமா?

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தீபம் ஏற்றுவதற்கு என, விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில், பிப்., 2ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தீத் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள ஊழியர்கள்,  அர்ச்சகர்கள், அன்னதான கூட பணியாளர்களுக்கு, தீயணைப்புத் துறையினர், தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.

இந்நிலையில், முதுநிலை அந்தஸ்து உள்ள பெரிய திருக்கோவில்களில் தீத்தடுப்பு நடைமுறை பாதுகாப்பு முறைகள் குறித்து, உடனடியாக தணிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கொடிமரம் மற்றும் கோவிலின் பிற சன்னதிகளின் முன், தீபமேற்ற தடை விதிக்கப்பட்டு, தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக, கொடி மரம் அருகே, விளக்கு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் தீபமேற்றுகின்றனர். ஆனால், வரதராஜ பெருமாள் கோவிலில், கொடிமரம் அருகே விளக்கு மாடம் எதுவும் இல்லாததால், பக்தர்கள் பலிபீடம் மற்றும் கொடிமரம் அருகில் தீபம் ஏற்றுகின்றனர். இதனால், அங்குள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்களில், எண்ணெய் பிசுக்கு படிமங்களாக காட்சியளிக்கிறது. மேலும் சிலர், கீழ்புறத்தில் தீபம், கற்பூரம் ஏற்றுவதால், பக்தர்களின் ஆடைகளில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது. எனவே, கொடி மரம் அருகே, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar