Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தத்தில் மாரியம்மன் நகர்வலம் சங்கர ஜெயந்தி மஹோத்சவம் சங்கர ஜெயந்தி மஹோத்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18ம் நூற்றாண்டு புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
18ம் நூற்றாண்டு புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:04

திண்டுக்கல்: தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு வடிவத்தை கண்டுபிடித்தனர். சிறிய வட்டம் - அவர்கள் கூறியதாவது: ரோட்டோரத்தில் இந்தக்கல் உள்ளது. நான்கு கட்டங்களும், ஒரு முழுமை பெறாத கட்டமும் வரையப்பட்டு உள்ளது. மேல்பகுதியில், ஒரு சிறிய வட்டமும், இரண்டு, எல் வடிவ கோடுகளும் உள்ளன. கட்டத்தினுள், 18-ம் நுாற்றாண்டின் தமிழ் எழுத்துகளை, முழுமையாக உருவாக்கும் வடிவங்களை வரைந்துள்ளனர்.உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் உள்ளிட்ட, 247 எழுத்துகளையும் காண முடிகிறது.

அறிவுக் கூர்மை : ஒன்று முதல் பல கோடிகளுக்கு மேலாக, முடிவற்ற தமிழ் எண் உருக்களை உருவாக்குவது, கூடுதல் சிறப்பம்சம். எழுத்து, எண் உரு அமைப்பதில் சிரமம் தவிர்க்க, மேல் பகுதியில், மூன்று குறியீடுகளை அமைத்துள்ளனர். புராணகால அகத்தியர், கமண்டலத்தில் காவிரியை அடக்கியது போன்று, மிகச்சிறிய கட்டத்தில் எழுத்து, எண் உருக்களை அமைத்துள்ளனர். முன்னோர்களின் அறிவுக்கூர்மைக்கு, இது சிறந்த எடுத்துக்காட்டு.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை, கே கே புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உற்சவர் சன்னதியில் வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் துவங்கி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; தமிழ் கடவுளான முருகன் ஆன்மீகத்தை மட்டுமே விரும்புபவர் அவரிடம் பிரிவினை மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar