Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி அக்னி நட்சத்திர விழா : ... ருக்கு சமாதியில், கார் பார்க்கிங் : தி.மலை பக்தர்கள் வேதனை ருக்கு சமாதியில், கார் பார்க்கிங் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் விழுந்தான் துரியோதனன்!
எழுத்தின் அளவு:
திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் விழுந்தான் துரியோதனன்!

பதிவு செய்த நாள்

07 மே
2018
11:05

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.

திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சந்தன காப்பு, மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா வந்தது. இந்நிலையில் நேற்று, 18ம் நாளில், காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நடந்தது. நிகழ்ச்சியில், துரியோதனை படுகளம் பகுதிக்கு இழுத்து வந்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின், துரியோதனன் ரத்தத்தால் திரவுபதியம்மன் கூந்தல் முடிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர்.

காலை, 11:50 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ முட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு, பூங்கரகம் ஊர்வலத்துடன், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். பின், வாண வேடிக்கைகள், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. தீமிதி திருவிழாவில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், தி.மு.க., நகர செயலர், பூபதி உட்பட பலர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றதால், திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar