Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூப்பல்லக்கில் சிங்கம்புணரி ... நாககாளியம்மன் கோவில் விழா கோலாகலம் நாககாளியம்மன் கோவில் விழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்யாற்றில் கருடசேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:
செய்யாற்றில் கருடசேவை கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 மே
2018
11:05

உத்திரமேரூர்: கூழமந்தல், பேசும் பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி, செய்யாற்று படுகையில் கருட சேவை விழா கோலாகலமாக நடந்தது. பெருநகர் அடுத்த கூழமந்தலில் பேசும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, ஆண்டுதோறும் கூழமந்தல்- பெருநகர் இடையேயான செய்யாற்று படுகையில் சுற்று வட்டார கிராம சுவாமிகள் அலங்காரத்துடன் வந்திருந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த ஆண்டுகளில், செய்யாறு மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்தின், 15 கிராமங்களில் இருந்து, இந்த விழாவிற்கு சுவாமிகள் வருகை தந்து தரிசனம் அளித்தனர். ஆனால், சில கிராமங்களில் முன் போல விழா நடத்த அப்பகுதியினர் ஆர்வம் காட்டாததால், ஆண்டுக்காண்டு இவ்விழாவில் பங்கேற்கும் சுவாமிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தாண்டு, கூழமந்தலில் இருந்து பேசும் பெருமாள், இளநீர்குன்றம்; வைகுண்ட ஸ்ரீனிவாசப்பெருமாள், சோழாவரம்; கரியமாணிக்கப் பெருமாள், சேத்துப்பட்டு; கல்யாண வெங்கசேப்பெருமாள், இளநகர்; ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய ஐந்து சுவாமிகள், அந்தந்த பகுதிகளில் இருந்து, இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டனர். ஊர்வலமாக வந்து, அதிகாலையில், கூழமந்தலுக்கும், பெருநகருக்கும் இடையிலான செய்யாற்றில் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்தனர்.  அங்கு, பக்தர்கள் கூடி, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பிறகு, காலையில் சுவாமிகள் தங்கள் கோவிலுக்கு புறப்பட்டு  சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar